நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 23 hours ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 5 days ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 6 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026

தொழில்நுட்பம்

கடந்த 10 ஆண்டுகளில், 21 மடங்கு அதிகரித்த கைபேசி உற்பத்தி

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் கைபேசி உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 21 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரூபாய் 18,900 கோடி மதிப்பிலான கைபேசிகளை தயாரித்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூபாய் 4.10 லட்சம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டின் கைபேசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 2000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நாட்டின் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) உற்பத்தி வளர்ச்சியில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு கைப்பேசி உற்பத்தி அபரிமித வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் கைபேசி தேவையில் 97 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே பூர்த்தி செய்கிறது. எஞ்சிய 3 சதவீத தேவையை தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் நிறைவு செய்கின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 30 சதவீத கைபேசிகள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2014 -15 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1,556 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில், நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கைபேசிகளின் மதிப்பு 7,500 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் காரணமாக கைபேசி ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கைபேசிகள் அதிக அளவில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய சந்தைகளுக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் கணிசமான அளவு ஏற்றுமதி ஆகின்றன.

பெரிய அளவிலான மின்னணு சாதனங்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது, இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.