நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..!

Jul 21, 2026 21 Jul 2026 0 Views
நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக தயாரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
ற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள், நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு கிழிவதும், அழுக்கடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நீண்டகால பயன்பாட்டிற்கு உகந்த வகையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு மாறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. பையாக்சியலி ஓரியண்டட் பாலிபுரோப்பிலீன் (Biaxially Oriented Polypropylene - BOPP) வகை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நோட்டுகள், காகித நோட்டுகளை விட 2 முதல் 4 மடங்கு அதிக நாட்கள் நீடிக்கும்.

மேலும், கிழிவது, ஈரமாவது மற்றும் அழுக்கடைவது போன்றவை குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தெளிவான பாதுகாப்பு வடிவமைப்பு, ஹோலோகிராம், சிறப்பு மை உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவதால், கள்ளநோட்டுகளை தயாரிப்பது மிகவும் கடினமாகும். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும், கடந்த 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை.தற்போது, உலகளாவிய டெண்டர் மூலம் பிளாஸ்டிக் தாள்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை RBI தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.