நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு 7 hours ago
news தொகுதிக்கு 10 பெண்கள்... தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் "வெற்றி மகளிர்" திட்டத்தில் சேருவது எப்படி? 1 days ago
news QIP மூலமாக ரூ.17,500 கோடித் திரட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் திட்டம் 3 days ago
news AI உதவியுடன் முதலீடு செய்யும் Gen Z இளைஞர்கள் : கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் 4 days ago
news வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம் 6 days ago
news எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகும் டாடா 29 Sep 2026
news ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் துறையில் நுழையும் RR Kabel, அடுத்தது என்ன? 26 Sep 2026
news இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான கமிஷனை குறைக்க திட்டமிடும் ஐஆர்டிஏஐ, பிரீமியம் குறையுமா? 24 Sep 2026
news அடுத்த 5 ஆண்டுகளில் தலைகீழாக மாறப்போகும் ஹிந்துஸ்தான் காப்பர், ரூ.7,000 கோடி முதலீடு செய்யபோவதாக அறிவிப்பு, வேகமாக உயரும் பங்கு விலை 23 Sep 2026
news ரூ.10-க்கு வாங்குற பொருள்லாம் கண்ணுக்கே தெரியாம குறையுது! ஷாப்பிங் பண்றவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஷாக்கிங் தகவல்! 22 Sep 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு

Oct 06, 2026 • 7 hours ago • 0 Views
RBI தற்போது புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதங்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதங்கள் முழு விவரம் மற்றும் இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்

ரிசர்வ் வங்கி தற்போது ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது அக்டோபர் 2026 முதல் ஏப்ரல் 2027 வரை அடுத்தகட்ட அரையாண்டு வட்டி விகிதமாக ஆண்டுக்கு 6.45% என RBI நிர்ணயம் செய்துள்ளது. சந்தை அபாயம் எதுவும் இல்லாமல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிலையான வருமானத்தை பெற விரும்பினால் இந்த ஃப்ளோட்டிங் ரேட் பாண்ட் பயனுள்ளதாக இருக்கும்.

ஃப்ளோட்டிங் ரேட் பாண்ட் விளக்கம்ஆர்பிஐ ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட் 2028 என்பது இந்திய அரசாங்கம் ஆதரவு பெற்ற கடன் பத்திரம். இதில் வட்டி விகிதம் என்பது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறும். இந்த வட்டி விகிதம் என்பது NSC - National Savings Certificate திட்டத்தின் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் என்பது NSC யின் அப்போதைய வட்டி விகிதத்தின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றது. அந்த வகையில் தற்போது அடுத்த ஆறு மாதங்களுக்கான ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் 6.45% என RBI அறிவித்துள்ளது

ஒரு லட்சம் முதலீட்டிற்கான கணக்கு
இந்த திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 6.45% வட்டி விகிதத்தில் ஒரு ஆண்டிற்கு கிடைக்கும் வருமானம் 6,450 ரூபாய்.ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு
ஒருமுறை கிடைக்கும் தொகை 3,225 ரூபாய்

இதில் வட்டி தொகையானது நேரடியாக முதலீட்டாளர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும்

யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்
தான் முதலீடு செய்யும் பணம் முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்
தன் பணத்திற்கு மாறுபட்ட வட்டி விகிதம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரே வட்டி விகிதங்களில் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு தாராளமாக இந்த சேமிப்பு திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்

குறிப்பு
இந்த திட்டத்தில் 7 ஆண்டுகள் கட்டாயம் லாக் இன் காலம் உண்டு. ஆனாலும் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுப்பதற்கு சில சலுகைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது