நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? Just now
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 5 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 6 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026

முதலீடுகள்

108 வருட பழமையான நிறுவனம்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
108 வருட பழமையான சோப் நிறுவனம் குறித்த, ஆனந்த் மஹிந்திராவின் ஏக்கமான எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

100 சதவீதம் சந்தன எண்ணெயை பயன்படுத்தி உற்பத்தியாகும் உலகின் ஒரே சோப் என்று கூறப்படும், 'மைசூர் சாண்டல் சோப்' 1916 முதல் கிடைக்கிறது.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்திய தனது எக்ஸ் பதிவில், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும், பாரம்பரிய பிராண்டான மைசூர் சாண்டல் சோப்பைப் பாராட்டினார். தூய சந்தன எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பிரபலமான சோப்பு, 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய குடும்பங்களில் பிரதானமாக உள்ளது.

அரசுக்கு சொந்தமான, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் நிலையான தேவையை பூர்த்தி செய்ய, தினமும் சுமார் 10 முதல் 12 லட்சம் சோப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு காலத்தில் சோப் பிராண்டின், பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.

சோப்பின் உற்பத்தி முறையைக் காண்பிக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, “இந்த வீடியோவைப் பார்த்ததும் ஏக்கத்தால் மூழ்கினேன், நிறுவனம் இவ்வளவு காலம் நிலையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதை மீண்டும் வாங்கி பாரம்பரியமான நறுமணத்தை சுவாசிக்கப் போகிறேன், என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ, பெங்களூருவைச் சேர்ந்த ஷிவா ராய் என்பவரால் உருவாக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில், இந்த வீடியோ 23.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பதிவு ஏற்கனவே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.அந்த பதிவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை எதிர்மறையாக பாதிக்கும் எந்த இரசாயனமும் இல்லாமல் கிடைக்கும் சிறந்த சோப்புகளில் ஒன்று மைசூர் சாண்டல். ஒவ்வொரு இந்தியனும் அதனை ஒருமுறையாவது முயற்சிக்க வேண்டும்.! என்று கூறியுள்ளார்.

மற்றொருவர்,"இது தனித்துவமானது, பழங்கால, மைசூர் மகாராஜா தனது விஞ்ஞானியை இங்கிலாந்துக்கு சோப்பு தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய அனுப்பினார், பின்னர் இந்த தொழிற்சாலையை நிறுவினார். 60-களில் இருந்து, இது நல்ல வாசனையுடன் கூடிய குடும்பங்கள் பயன்படுத்தும் சோப்பாக இருந்து வருகிறது. இந்த தொழிற்சாலை பாதுகாக்கப்பட்டு, அதன் தயாரிப்புகள் இந்தியாவிலும், உலக அளவிலும் விற்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.