நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

Startup நிறுவனங்கள் தொடங்குவதில், தமிழகம் தொடர்ந்து சாதனை

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
தமிழகத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, 23-12-2024 நிலவரப்படி தமிழகத்தில் 10,005 நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்-களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து 10,000 என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

தமிழக அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், அதன் வளர்ச்சிக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது, நிதி அளிப்பது, வழிகாட்டுதல் என பல்வேறு செயல்களை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என StartUpTN அமைப்பின் இயக்குநர் சிவராஜா ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் மையங்கள் மற்றும் சென்னையில் ஒரு மெட்ரோ ஹப் மூலம் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு செழுமைப்படுத்தி வருவதாகவும், இது ஸ்டார்ட்அப்கள் வளர வலுவான உள்கட்டமைப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களிடம் தொழில் முனைவு ஆர்வத்தை உருவாக்கி, அதை ஊக்குவிப்பதன் மூலமாக, தமிழ்நாடு முன்னணி ஸ்டார்ட்அப் மையமாக மாறி வருகிறது.சென்னையில் மட்டுமல்லாமல், 2ம் கட்ட, 3ம் கட்ட நகரங்களிலும் ஸ்டார்ப் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதன் மூலமாக தொழில்முனைவோரின் வளர்ச்சியை வேகப்படுத்த முடிந்துள்ளது. மேலும் Department for Promotion of Industry and Internal Trade- இல் பதிவு செய்யப்பட்ட 10,005 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 4,925 நிறுவனங்கள் பெண்களின் தலைமையில் இயங்கி வருவது பாராட்டத்தக்கது.