நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 1 days ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 4 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 5 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026

தொழில்

புதிய பொறுப்பில் ஜோஹோ கார்ப்- ஸ்ரீதர் வேம்பு

Feb 08, 2025 08 Feb 2025 0 Views
ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவிலுள்ள மிக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பு வாய்நதவராக இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு, அட்வென்ட்ளெட் என்ற பெயரில துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்பத்தில் ஐடி மற்றும் நெட்வொர்க் மேலாண்மை தீர்வுகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டது. பின்னர், ஜோஹோ என்ற பெயருக்கு மாற்றம் செய்து, வியாபாரிகளுக்கான பல்வேறு இகாமர்ஸ், செயல்பாட்டு கருவிகள் மற்றும் தொழில்துறை மென்பொருட்களை வழங்குவதற்கான முன்னணி நிறுவனம் ஆக மாறியது.

ஸ்ரீதர் வேம்பு வழிகாட்டுதலின் கீழ், ஜோஹோ சிறிய அளவிலிருந்து உலகளாவிய பிரபலம் பெற்றது. அவர் நிறுவனம் பங்கு அல்லது வெளி நிதி முதலீடுகளைப் பெறாமல் தனது சுயமான முன்னேற்றத்தில் வளர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது, ஜோஹோ உலகளாவிய வணிகங்களில் மில்லியன கணக்கான பயனர்களுடன் செயல்படும் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படுகிறது.

ஸ்ரீதர் வேம்பு, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் ஊரக வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டு ஊரக பகுதிகளில் ஜோஹோ தனது தலைமையகத்தை அமைத்து, உள்ளூர் சமூக மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது ஸ்ரீதர் வேம்பு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலகி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில், AI துறையில் சமீபத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, தனது கிராமப்புற மேம்பாட்டு பணிகளைத் தொடர்வதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு களில் முழுநேரமு முழுநேரமும் ஈடுபடுவது சிறந்தது முயற்சிகளில் எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.'

இந்நிலையில், ஜோஹோவின் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், நிறுவனத்தின் முக்கிய வணிகப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

அமெரிக்க செயல்பாடுகளை இணை நிறுவனர் டோனி தாமஸ் மேற்பார்வையிடுவார்.

மேனேஜ் எஞ்சின் பிரிவை ராஜேஷ் கணேசன் வழிநடத்துவார்.

ஜோஹோ.காம் பிரிவை மணி வேம்பு வழிநடத்துவார்.

நிலையான வளர்ச்சி மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் தனது அர்ப்பணிப்புக்காக அனைவராலும் அறியப்பட்டவர் ஸ்ரீதர் வேம்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபடுவது நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். எங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி. முற்றிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் சவால்களை நாங்கள் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பதில் உள்ளது."என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்கள், ஜோஹோ நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் புதிய பாதைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.