நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம் Just now
news எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகும் டாடா 13 hours ago
news ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் துறையில் நுழையும் RR Kabel, அடுத்தது என்ன? 3 days ago
news இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான கமிஷனை குறைக்க திட்டமிடும் ஐஆர்டிஏஐ, பிரீமியம் குறையுமா? 5 days ago
news அடுத்த 5 ஆண்டுகளில் தலைகீழாக மாறப்போகும் ஹிந்துஸ்தான் காப்பர், ரூ.7,000 கோடி முதலீடு செய்யபோவதாக அறிவிப்பு, வேகமாக உயரும் பங்கு விலை 6 days ago
news ரூ.10-க்கு வாங்குற பொருள்லாம் கண்ணுக்கே தெரியாம குறையுது! ஷாப்பிங் பண்றவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஷாக்கிங் தகவல்! 22 Sep 2026
news வங்கிப் பணிகள் முடங்கப் போகுதா? செப். 28 முதல் 30 வரை SBI வங்கிக்கு லீவு.. உங்கள் வேலைகளை சீக்கிரமா முடிங்க! 21 Sep 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 19 Sep 2026
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 17 Sep 2026
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 16 Sep 2026

பொது செய்திகள்

வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம்

Sep 30, 2026 • Just now • 0 Views
வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வங்கி வேலை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்

வங்கி ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். எனவே வங்கி வேலை நிறுத்தத்தின் போது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கூட வங்கிகள் இயக்கப்பட்டன.

ஆனால் தற்போது இந்த வேலை நிறுத்தம் ஒத்துவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA ) மற்றும் வங்கிகள் தொழில்சங்கம் கூட்டமைப்பு (UFBU ) இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது. எனவே தான் இந்த வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது

எடுக்கப்பட்ட முடிவுகள்

Indian Banks’ Association மற்றும் United Forum of Bank Unions ஆகிய இரண்டு தரப்பிற்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாகவே தான் இந்த வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன

மாதத்தில் அணைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்க வேண்டும் என்பதே வங்கி ஊழியர்களின் கோரிக்கையாக இருந்தது. இதற்காக IBA மற்றும் UFBU உறுப்பினர்கள் நிறைந்த ஒரு சிறப்பு குழு அமைக்கப்படுமாம். இந்த குழு கலந்து ஆலோசித்து வாடிக்கையாளர்கள் பாதிப்படையாத வகையில் நல்ல முடிவை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வங்கி உயர் அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை குறித்தும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வங்கி ஊழியர்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசிக்க மற்றும் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகின்றது

வாடிக்கையாளர்கள் நிம்மதி

வேலை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதால் இன்று வழக்கம் போல அனைத்து வங்கிகளும் இயங்கும்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்

வேலை நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதால் காசோலையை பணமாக்கும் செய்வதில் எந்த தாமதமும் இருக்காது

ரொக்கமாக பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது வழக்கம் போல நடைபெறும்

வார வேலை நாட்கள்

வங்கி ஊழியர்கள் வைத்த முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று சனிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்பது தான். தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி வங்கிகள் சனிக்கிழமை இயங்குமா ? என்பது தான் அந்த குழப்பம். தற்போதைய நிலவரப்படி வழக்கம் போல மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தான் வங்கிகளுக்கு விடுமுறை.

IBA மற்றும் வங்கி சங்கங்கள் இடையே இதுகுறித்து உடன்பாடு ஏற்பட்டாலும் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது