நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news AI உதவியுடன் முதலீடு செய்யும் Gen Z இளைஞர்கள் : கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் Just now
news வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம் 1 days ago
news எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகும் டாடா 2 days ago
news ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் துறையில் நுழையும் RR Kabel, அடுத்தது என்ன? 5 days ago
news இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான கமிஷனை குறைக்க திட்டமிடும் ஐஆர்டிஏஐ, பிரீமியம் குறையுமா? 24 Sep 2026
news அடுத்த 5 ஆண்டுகளில் தலைகீழாக மாறப்போகும் ஹிந்துஸ்தான் காப்பர், ரூ.7,000 கோடி முதலீடு செய்யபோவதாக அறிவிப்பு, வேகமாக உயரும் பங்கு விலை 23 Sep 2026
news ரூ.10-க்கு வாங்குற பொருள்லாம் கண்ணுக்கே தெரியாம குறையுது! ஷாப்பிங் பண்றவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஷாக்கிங் தகவல்! 22 Sep 2026
news வங்கிப் பணிகள் முடங்கப் போகுதா? செப். 28 முதல் 30 வரை SBI வங்கிக்கு லீவு.. உங்கள் வேலைகளை சீக்கிரமா முடிங்க! 21 Sep 2026
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 19 Sep 2026
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 17 Sep 2026

பங்கு வர்த்தகம்

AI உதவியுடன் முதலீடு செய்யும் Gen Z இளைஞர்கள் : கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

Oct 02, 2026 • Just now • 0 Views
இன்றைய Gen Z இளைஞர்கள் பெரும்பாலும் AI கருவியை பயன்படுத்தி முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ? நிதி ஆலோசகர்களின் அறிவுரை என்ன ? என்பதை பார்க்கலாம்

இன்றைய இளைஞர்கள் ஏராளமானோர் பங்குசந்தை, SIP என முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்து வரும் Gen Z இளைஞர்கள் AI உதவியுடன் தான் பெரும்பாலும் முதலீடு செய்து வருவதாக சொல்லப்படுகின்றது. நிதி ஆலோசகர்களின் ஆலோசனையை நாடாமல் முழுக்க முழுக்க AI கருவிகளையே Gen Z இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவ்வாறு AI பரிந்துரைக்கும் பங்குகள் ,AI உதவியுடன் SIP முதலீடு செய்வதனால் நஷ்டம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

AI என்பதை ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முழுமையாக நம்பி முதலீடு செய்யக்கூடாது என்பது தான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கின்றது. ஒருவேளை AI ஐ நம்பி முதலீடு செய்வதற்கு முன்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

AI தரவு தவறுகள் -கற்பனை ஆபத்துகள்
AI சில சமயங்களில் எந்த ஒரு உண்மை ஆதாரமும் இன்றி தகவல்களை தவறாக உருவாக்குகின்றன. இதற்கு AI Hallucination என பெயர் உள்ளது.

பல நேரங்களில் AI ஒரு நிறுவனத்தின் லாப கணக்குகளை தவறாக காட்டும் வாய்ப்புகள் உள்ளது

AI காட்டும் தரவுகளை எப்போதும் BSE, NSE அல்லது அந்தந்த நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும்

விதிமுறைகள் அறியாமை
ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் கொள்கையில் என்ன நடக்கும் ? அல்லது அரசு எந் துறையில் புதிய வரியை விதிக்கும் என்பது AI க்கு தெரியாது

AI கருவிகளால் மனித உணர்வுகள், சந்தை உணர்வுகள் என எந்த ஒரு உணர்வுகளையும் கணிக்க முடியாது

தனிப்பட்ட அபாய திறன்
முதலீட்டில் தனிநபரின் அபாயத்தை எதிர்கொள்ளும் திறன் என்பது மிகவும் முக்கியம். ஆனால் AI அதனை சரியாக கணிக்காது. 22 வயது திருமணமாகாத இளைஞர்களுக்கும் 45 வயது தந்தைக்கும் ஒரே மாதிரியான அதிக ரிஸ்க் கொண்ட பங்குகளை பரிந்துரைக்கலாம். இது குடும்ப பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு ஆபத்தானதாகும்

சந்தை சரிவை எதிர்கொள்ளுதல்
முதலீடு செய்யும்போது சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல சந்தை சரிவை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதும் முக்கியம் தான்

பங்குசந்தை சரிவில் இருக்கும்போது AI உங்களுடைய பயத்தை போக்காது. அதுவே ஒரு நிதி ஆலோசகர் சந்தை சரிவால் நமக்கு ஏற்படும் பயத்தை போக்கி ஆலோசனை வழங்குவார். ஆனால் AI அவ்வாறு செய்யாது