நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? Just now
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 5 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 6 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026

உலக வர்த்தகம்

அமெரிக்காவின் பிடியிலிருந்தும், ஈரானின் மிரட்டலில் இருந்தும் தப்பிக்க சீனா போட்டுள்ள அந்த மாஸ்டர் பிளான் என்ன?

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
உலகமே ஒரு பதற்றமான சூழலில் இருக்கிறது. ஒருபுறம், டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடி பொருளாதார தடைகள் மூலம் ஈரானை முடக்க பார்க்கிறார். மறுபுறம் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என ஈரான் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. இந்த இரு தரப்பு மோதலில் உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகம் கேள்விக்குறியாகி நிற்கும் சூழலில், சீனா மட்டும் மிக அமைதியாக விலகி நிற்கிறது.

இந்தியாவை விட மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில் எண்ணெய் தட்டுப்பாடே இல்லையா? ஏன் இந்த அமைதி? சீனாவுக்கு பாதிப்பு இல்லையா? உண்மை அதுவல்ல. மற்ற நாடுகள் வளைகுடா கடற்பகுதியை நம்பியிருக்கும் போது, பெய்ஜிங் சத்தமில்லாமல் பல ஆண்டுகளாக தனது எரிசக்தி பாதுகாப்பு வலையை விரித்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகமே இருளில் மூழ்கும், ஆனால் சீனா மட்டும் பிரகாசிக்கும் என்கிற அளவுக்கு சீனா உருவாக்கியுள்ள அந்த ரகசிய மாற்று பாதைகள் என்ன? ஏன் சீனாவை அசைக்கவே முடியவில்லை.

உலகமே ஹார்மூஸ் ஜலசந்தியை உற்று நோக்கி கொண்டிருக்கும் வேளையில், சீனா அந்த விவாதத்தையே காலாவதியான ஒன்றாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒவ்வொரு மோதலும் உலக எண்ணெய் சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. விலை உயர்வு மற்றும் விநியோக தட்டுப்பாடு குறித்த அச்சம் உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் சீனா இந்த விளையாட்டில் பங்கேற்க விரும்பவில்லை. மற்ற நாடுகள் எதை கண்டு அஞ்சுகிறார்களோ, அந்த அபாயங்களை முற்றிலும் தவிர்க்கும் ஒரு மாற்று அமைப்பை பெய்ஜிங் உருவாக்கி வருகிறது.

இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மையப்புள்ளியாக ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா' (State Grid Corporation of China) உள்ளது. இது ஏற்கனவே சீனாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை உள்ளடக்கிய, 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் வழங்கும் ஒரு பரந்து விரிந்த வலையமைப்பாகும். சீனா சதர்ன் பவர் கிரிட் நிறுவனத்துடன் இணைந்து, இது ஒரு நீண்ட கால எரிசக்தி அதிகார ஆட்டத்தை நடத்தி வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் அந்த எண்ணெயை சுமந்து வரும் பலவீனமான கடல்வழி பாதைகளை சார்ந்திருப்பதை குறைக்க, நாடு தழுவிய ஒரு சூப்பர் கிரிட் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இது சீனாவின் எரிசக்தி சுதந்திரத்தின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது. தற்போது ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் மத்தியில், சீனாவின் அமைதிக்கும் இதுவே காரணம்.

சீனா தனது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மின்சாரத்தை கொண்டு செல்ல அதி உயர் மின்னழுத்த (UHV) மின் நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சோலார் மற்றும் காற்று மூலம் அபரிமிதமான மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் தொழிற்சாலைகளும் மக்களும் கிழக்கு கடற்கரை நகரங்களில் உள்ளனர். இந்த இரண்டையும் இணைப்பதே இந்த சூப்பர் கிரிட் திட்டம்.

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு 2026 முதல் 2030 வரையிலான ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 4 டிரில்லியன் யுவான் (574 பில்லியன் டாலர்) செலவிடப்பட உள்ளது. சாதாரண மின் கம்பிகளை விட மிக குறைவான மின் இழப்புடன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு மின்சாரத்தைக் கடத்தும் சிறந்த தொழில்நுட்பத்தை சீனா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட திட்டத்தை வெறும் மின்சார விநியோகத்திற்காக மட்டும் தொடங்கப்படவில்லை. மாறாக இதற்கு பின்னால் பெரிய புவிசார் அரசியல் காரணங்கள் உள்ளன. ஒன்று இந்தியா போன்று இல்லாமல் எண்ணெய் பிடியிலிருந்து விடுதலை.

சீனா தனது எரிசக்தி தேவைக்காக வளைகுடா நாடுகளின் எண்ணெயை அதிகம் நம்பியுள்ளது. அந்த எண்ணெய் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் வரவேண்டும். அமெரிக்காவுடனான மோதல் அல்லது போரின் போது இந்த பாதை அடைக்கப்பட்டால் சீனாவின் பொருளாதாரம் முடங்கிவிடும். இதை தவிர்க்க, வாகனங்களையும் தொழிற்சாலைகளையும் மின்சாரமயமாக்கி, அந்த மின்சாரத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதே சீனாவின் திட்டம். ஒரு நாடு மின்சாரத்தில் இயங்க ஆரம்பித்து விட்டால், அதற்கு பெட்ரோல், டீசல் தேவை குறையும். இதனால் ஹார்மூஸ் ஜலசந்தியில் எந்த பிரச்சினை நடந்தாலும் அது சீனாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

சீனா உலகின் மிகப்பெரிய அளவில் நிலக்கரியை பயன்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கவும், அதே சமயம் தற்சார்பு அடையவும் சோலார் மற்றும் காற்று மின்சக்தியை இந்த கிரிட் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்கிறது.

சுருக்கமாக சொன்னால் எங்கே எரிபொருள் கிடைக்கும் என்று தேடி கொண்டிருக்கும் போது, சீனா எண்ணெய் தேவையில்லாத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியை போன்ற உலகளாவிய செக் போஸ்ட்களை சீனா தனது தொழில்நுட்பத்தின் மூலம் பயனற்றதாக மாற்றி கொண்டிருக்கிறது.