நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 4 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொருளாதாரம்

வெறும் தோசை, பிரியாணி கடைகள் மட்டும் மூடப்படவில்லை; AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை?

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
ஈரான்-மத்திய கிழக்கு போர் சூழல், நம் சமையலறையை தாண்டி, டேட்டா சென்டர்கள் வரை எப்படி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியுமா? ஒரு சிறிய எரிவாயு தட்டுப்பாடு, ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியையே தடுத்து நிறுத்தி உள்ளது

சர்வதேச அளவில் இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியில் இரண்டாவது பெரிய நாடாக இருந்து வருகிறது. ஈரான் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரின் மத்தியில், ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இது இந்தியா போன்ற பெரிய இறக்குமதியாளர்களுக்கு பெருத்த அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அரசின் பல பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.

உணவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற பிற துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஐடி துறையை எப்படி பாதித்துள்ளது? எரிவாயு பற்றாக்குறைக்கும், ஏஐ (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்திற்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பாக இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.

ஏஐ தொழில்நுட்பம் என்பது வெறும் சாப்ட்வேர் மட்டுமல்ல, அதற்கு பின்னால் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்கள் உள்ளன. ஏஐ மாடல்களை இயக்க கம்ப்யூட்டர்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். இதற்கு தேவைப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலமே கிடைக்கிறது. ஆக தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் டேட்டா சென்டர்களை இயக்கும் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு தாறுமாறாக உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது அதன் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அரசு வீட்டு உபயோகத்திற்கும், பொது போக்குவரத்திற்கும் எரிவாயுவை முன்னுரிமைப் படுத்துவதால், மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்கும் எரிவாயு குறைந்து, மின்வெட்டு அல்லது மின்சார விலையேற்றம் ஏற்படுகிறது. இது ஏஐ கட்டமைப்புகளை நேரடியாக முடக்குகிறது. இதனால் ஐடி நிறுவனங்களின் லாப வரம்பு குறையும். இதனால் புதிய திட்டங்கள் அல்லது ஏஐ தொடர்பான ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது குறையலாம். மேலும் நிறுவனங்கள் செலவை குறைக்க, சம்பள உயர்வை கட்டுப்படுத்துவது அல்லது ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். புதிய ஆட்சேர்ப்பும் குறையலாம்.

இந்த சவாலான காலகட்டத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ், ரூட் மொபைல் லிமிடெட், அஃபிள் (இந்தியா) லிமிடெட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், எல்டிஐமைன்ட் ட்ரீ போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். முதலீட்டாளர்கள் அதிக கிளவுட் செலவுகளை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.

பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவதற்கு முன், அந்த நிறுவனம் எந்த அளவுக்கு கிளவுட் சேவைகளை சார்ந்துள்ளது மற்றும் அவர்களின் எரிசக்தி செலவு மேலாண்மை எப்படி உள்ளது என்பதை அவர்களின் காலாண்டு அறிக்கையில் பார்த்து தெரிந்து கொண்டு திட்டமிடுதல் நல்லது.