நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 4 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொருளாதாரம்

தங்கத்தை போலவே வெள்ளியையும் அடகு வைக்கலாம் - RBI முக்கிய அறிவிப்பு!

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் வெள்ளியின் மீது கடன் பெறும் முறை தொடங்குகிறது. இது குறிப்பாக சிறு வியாபாரிகள், இல்லத்தரசிகள் மற்றும் அவசரமாகப் பணம் தேவைப்படுபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி கடன் (Silver Loan) என்றால் என்ன? வெள்ளியின் மீதான கடன் என்பது உங்கள் வெள்ளி நகைகள் அல்லது பொருட்களை அடகு வைத்துப் பணம் பெறும் ஒரு வழியாகும். இதுவரை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கு கடன்களை வழங்கி வந்த நிலையில், தற்போது வெள்ளிக்கும் கடன் வழங்கும் வசதி விரிவுபடுத்தப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நிதி விதிமுறைகளின்படி, ஏப்ரல் 1 முதல் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) வெள்ளியின் மீது கடன் வழங்க அனுமதிக்கப்படும்.

வெள்ளியின் மீது எவ்வளவு கடன் பெறலாம்? மணி கண்ட்ரோல் (Moneycontrol) தெரிவித்துள்ளபடி, நகைகளாக இருந்தால் 10 கிலோ வரையிலும், நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரையும் வெள்ளியை அடமானம் வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதிலும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரையும், 5 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு 75 சதவீதம் வரையும் கடன் வழங்கப்படும்.

வெள்ளியின் மீது கடன் பெற விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் முகவரிச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடன் வழங்குவதற்கு முன்பு வங்கி அதிகாரிகள் வெள்ளியின் தூய்மையையும் சரிபார்ப்பார்கள். இந்த நிலையில், பொதுவாக 999 தூய்மையான வெள்ளிக் கட்டிகள் அல்லது பழைய வெள்ளி நகைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

டிஜிட்டல் வெள்ளிக்கும் கடன் உண்டா? தற்போது மக்கள் டிஜிட்டல் வடிவத்திலும் வெள்ளியை வாங்குகிறார்கள். எனவே, எதிர்காலத்தில் வெள்ளி ETF-கள் அல்லது டிஜிட்டல் வெள்ளியை வைத்திருப்பவர்களுக்கும் இதுபோன்ற கடன் வசதிகள் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.