நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! Just now
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 2 days ago
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 4 days ago
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 5 days ago
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 5 days ago
news LPG Cylinder Price Drop | எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு.. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! 01 Jul 2026
news ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு! 30 Jun 2026
news ஜூலை மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. RBI பட்டியல் சொல்வதென்ன! 29 Jun 2026
news ஒரு லட்சம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் Volkswagen... தொழிற்சாலைகளை மூடத் திட்டம்... 27 Jun 2026
news வணிக பயன்பாடு சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்! – மத்திய அரசு 26 Jun 2026

பொருளாதாரம்

இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்!

Jul 08, 2026 Just now 0 Views
மற்ற நாடுகளில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக கடந்தாண்டை விட இந்தாண்டு இந்தியாவில் கிரெடிட் கார்டு மவுசு பெருமளவில் சரிந்துள்ளது. அதற்கான காரணம் என்ன ? என்பதை தற்போது பார்க்கலாம்

இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு தான் வருகின்றது. எப்போதுமே மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் மிக குறைவாக தான் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இன்றளவும் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு குறைவாகவே இருப்பதாக CIBIL அமைப்பு சொல்கின்றது

குறைவு
இந்தியாவில் கடன் வாங்க தொகுதியுள்ள 25 கோடி மக்களில் வெறும் 5 கோடி மக்கள் தான் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்களாம். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் கடன் வாங்க தொகுதியுள்ளவர்களில் 25 % பேரிடம் மட்டும் தான் கிரெடிட் கார்டு உள்ளதாம். இதுவே அமெரிக்காவில் கடன் வாங்க தொகுதியுள்ள 81 % கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். இதே போல பிற நாடுகளிலும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட பல மடங்கு அதிகமாகவே உள்ளது

காரணம் என்ன ?
மக்கள் தற்போது கிரெடிட் கார்டை விட எளிதாக கிடைக்கும் பர்சனல் லோன்கள், UPI என இந்த வழியில் சென்றுவிட்டனர். அதன் காரணமாக தான் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கின்றது

புதியவர்களின் எண்ணிக்கையும் சரிவு
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல் புதிதாக கிரெடிட் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டது. கடந்தாண்டு புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியவர்களில் 26 % பேர் முதல்முறையாக கடன் வாங்குபவர்களாக இருந்தனர். ஆனால் இந்தாண்டு வெறும் 8 % பேர் தான் வாங்கியுள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்களே தான் வேறு கார்டகளை வாங்கியிருக்கின்றார்களே தவிர புதிதாக கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்துவிட்டது

இந்நிலையில் மக்கள் தற்போது கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு செல்வதை காட்டிலும் மிக எளிய முறையில் UPI மூலம் தான் பணம் செலுத்த விரும்புகின்றனர். எனவே தான் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவிட்டதாக தெரிகின்றது. ஒட்டுமொத்தத்தில் UPI யின் ஆதிக்கத்தின் காரணமாகவே தான் இந்தியாவில் கிரெடிட் கார்டு மவுசு மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது