நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 4 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 5 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொருளாதாரம்

Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

Jul 25, 2026 25 Jul 2026 0 Views
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக சாகுபடிக்காக அதிக முதலீடு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. எல்நினோ பருவநிலை மாற்றத்தால் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற தகவலையடுத்து, குறுகிய காலத்தில் மகசூல் தரும் பயிராக கருதி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததை விட போதிய நீர் கிடைத்ததால் தக்காளி செடிகள் நன்றாக வளர்ந்து, தற்போது அதிகளவில் விளைச்சல் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், சூளகிரி மற்றும் ராயக்கோட்டை மார்க்கெட்டுகளுக்கு ஒரே நேரத்தில் அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும், 25 கிலோ கொண்ட ஒரு கிரேட் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் "5 கிலோ ரூ.50" என்ற விலையில் தெருவோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

தக்காளி சாகுபடிக்காக விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நீர்ப்பாசனம், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது கிடைக்கும் விலை உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.