நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! Just now
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 3 days ago
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 28 Jul 2026
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 27 Jul 2026

பொருளாதாரம்

செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

Sep 02, 2026 Just now 0 Views
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை 4,000 குவிண்டாலிலிருந்து 2,000 குவிண்டாலாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் சர்க்கரை வியாபாரிகளுக்கு 4,000 குவிண்டால் கையிருப்பு வரம்பு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சர்க்கரைப் பதுக்கலையும் ஊக வணிகத்தையும் தடுக்கும் நோக்கில் இந்த வரம்பு தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

திருத்தப்பட்ட விதிகளின்படி, செப்டம்பர் 15 முதல் வியாபாரிகள், சர்க்கரையைக் கொள்முதல் செய்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் இருப்பில் வைத்திருக்கக் கூடாது. நாடு முழுவதும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் 2,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரையை கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது.

இந்த புதிய கையிருப்பு வரம்பில் இருந்து கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து 4,000 குவிண்டால் கையிருப்பு வரம்பு நீடிக்கும். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் முக்கிய மையமாக கொல்கத்தா செயல்படுவதால் இந்த சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள், முகவர்கள் மற்றும் வர்த்தகர்களின் இருப்புகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அதிகப்படியான இருப்பு வைத்திருத்தல் மற்றும் விற்பனை முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக, சமீபத்திய நாட்களில் ஆலை சர்க்கரையின் விலை சுமார் 20% வரை குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சில்லறை விற்பனை விலையும் குறையத் தொடங்கியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதையும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் சென்று சேர்வதையும் உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.