நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news இந்தியாவில் அதிகரிக்கும் 3 ஆன்லைன் மோசடிகள் : பாதிக்கப்பட்ட 67 % பேருக்கு பணம் கிடைக்கவில்லையா ? ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி Just now
news டாலருக்கு எதிராக கலக்கும் ரூபாய்.. ஆர்பிஐ-யின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட்... கலக்கலான 5 காரணங்கள்! 14 hours ago
news விமானம் போல குளியலறை ஹாட் ஷவருடன் 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் வருது.. முழு விவரம் உள்ளே! 1 days ago
news ஹவுசிங் லோன் EMI ஏறப்போகுது! PNB, Bank of Baroda உட்பட 4 வங்கிகள் வட்டி உயர்த்தியதால் அதிர்ச்சியில் மக்கள்! 2 days ago
news பால், பெட்ரோல்-டீசலைத் தொடர்ந்து எகிறிய வெங்காய விலை.. மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான் அடிமேல் அடி! 4 days ago
news அடுத்தகட்ட மெகா வளர்ச்சிக்குத் தயாராகும் ஜியோ.. பங்குச்சந்தை அறிமுகம் குறித்து ஆகாஷ் அம்பானி பகிர்ந்த தகவல்! 5 days ago
news யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை : ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? 6 days ago
news அக்டோபர் 8ம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், உள்ளீட்டு வரி வரவு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம் 07 Oct 2026
news RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு 06 Oct 2026
news தொகுதிக்கு 10 பெண்கள்... தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் "வெற்றி மகளிர்" திட்டத்தில் சேருவது எப்படி? 05 Oct 2026

பொது செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் 3 ஆன்லைன் மோசடிகள் : பாதிக்கப்பட்ட 67 % பேருக்கு பணம் கிடைக்கவில்லையா ? ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி

Oct 15, 2026 • Just now • 0 Views
இந்தியாவில் இந்த மூன்று வகையில் தான் அதிகமாக ஆன்லைன் மோசடிகள் நடப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் GSMA India Consumer Scam Report 2026 ஆய்வு முடிவுகள் இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது

இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆன்லைன் மோசடிகளால் பலர் தங்களின் பணத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் GSMA India Consumer Scam Report 2026 வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றது.

அதாவது இந்தியாவில் சைபர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்களில் 67 % பேருக்கு ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்கவில்லையாம். இந்த விஷயம் தான் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் GSMA அறிக்கையின் படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 % நுகர்வோர்கள் நேரடியாக மோசடிக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

மேலும் 39 % நபர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் GSMA அறிக்கையின் படி அதிகமான ஆன்லைன் மோசடி வழக்குகள் என்பது மூன்று வகைகளில் தான் பதிவாகி இருக்கின்றதுஆன்லைன் ஷாப்பிங் மோசடி -33 % வழக்குகளும், லாட்டரி மற்றும் பரிசு பொருட்கள் மோசடி 31 %. போலி வேலை மற்றும் பகுதி நேர வருமான மோசடி 30 % ஆகியவற்றில் தான் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி
போலி மின் வணீக இணையதளங்கள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பொருட்களுக்கு அதிக தள்ளுபடி தருவதாக கூறி போலி கட்டண இணைப்புகள் மூலம் பணத்தை பறிப்பது

லாட்டரி -பரிசு பொருட்கள் மோசடி
உங்களுக்கு லாட்டரி டிக்கெட்டில் பல லட்சம் பரிசு விழுந்துள்ளது, விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது என கூறி செயலாக்க கட்டணத்தை பெற்று மோசடி செய்வது

போலி வேலை -பகுதி நேர வருமான மோசடி
வீட்டில் இருந்தபடியே தினம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறி பண மோசடியில் ஈடுபடுவது
இதைத்தவிர QR குறியீடு மற்றும் போலி கட்டண இணைப்பு போன்றவை மூலமும் பண மோசடி நடந்துள்ளது. இதை தவிர AI மற்றும் Deepfake மூலமாகவும் ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன.

சரி செய்யும் வழி
நாம் ஆன்லைன் மோசடியில் மூலம் பணத்தை இழந்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பது அவசியம். ஒரு மணி நேரத்திற்குள் புகார் வழங்கினால் மோசடி செய்பவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். மேலும் பணத்தை திரும்ப பெரும் வாய்ப்பும் அதிகமாகும்